“வழக்கு போடுவேன்…” – நடிகை நிவேதா பெத்துராஜின் எச்சரிக்கை..!

“வழக்கு போடுவேன்…” – நடிகை நிவேதா பெத்துராஜின் எச்சரிக்கை..!

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் ஒருவர். சமீபத்தில் ஒரு சில ஊடகங்களில் டூ பீஸ் உடையில் இருக்கும் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான புகைப்படத்தை போட்டு, அது நிவேதா பெத்துராஜ்தான் என்று சொல்லியிருந்தார்கள்.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பாக சில பலான இணையத்தளங்களில் வெளிவந்த ஒரு வீடியோவை காண்பித்து அதில் இருப்பது நிவேதா பெத்துராஜ்தான் என்று கலங்கடித்தார்கள். அப்போது மனம் கலங்கிய நிலையில் நிவேதா அது தான் இல்லை என்று சொல்லிச் சொல்லியே ஓய்ந்து போனார்.

அதற்குள்ளாக இந்த புகைப்பட சர்ச்சையும் வர ஊடகங்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

nivetha pethuraj-bikini-dress-2

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு அது நான்தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.

என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவனக் குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது.

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு.

இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. இந்த  கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன்.

இது தொடர்ந்தால் இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்…” என்று மனம் நொந்த நிலையில் கூறியுள்ளார்.




error: Content is protected !!