full screen background image

சாதனை படைத்த ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் ‘மேனா மினுக்கி’ பாடல்..!

சாதனை படைத்த ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் ‘மேனா மினுக்கி’ பாடல்..!

மைண்ட் ட்ராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் ரிதுன் தயாரித்து, இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவோ ஒரு பறவை’.

இப்படத்தில் பள்ளிப் பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி இருவரும் நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர்-நடிகை நடிக்க உள்ளனர். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். உண்மையில் இவர்கள்தான் படத்தின் நாயகன், நாயகி ஆவார்கள். பி.கே.மணி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

ninaivo oru paravai-screenshot-1

50 வயது நிரம்பிய கணவன், மனைவி இருவரும் பிரான்ஸ் தலைநகரமான பாரிஸூக்கு செல்லும் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர்கள் கடந்து வந்த பாதை… நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை எப்படி மேற்கொள்கிறார்கள்… அதன் அவசியம் என்ன என்பதை இத்திரைப்படம் விளக்குகிறது.

இசையமைப்பாளர் தமனின் இசையில்  இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மேனா மினிக்கி’ என்ற பாடலின் ‘லிரிக் வீடியோ’ சமீபத்தில் வெளியாகி 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தப் பாடலை படத்தின் இயக்குநரான ரிதுன் எழுதியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

Our Score