‘நைட் ஷோ’ – ‘ஒரு நாள் இரவில்’ என்று பெயர் மாறியது

‘நைட் ஷோ’ – ‘ஒரு நாள் இரவில்’ என்று பெயர் மாறியது

இயக்குநர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நாள் இரவில்’.

சத்யராஜ், அனுமோல், யூகி சேது, அறிமுக நடிகர் வருண், R. சுந்தர்ராஜன்,  கல்யாணி நடராஜன், தீட்ஷிதா  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் (Think Big Studios) – A.L.அழகப்பன், தயாரிப்பாளர் (Paulsons Media Pvt Ltd) – சாம் பால், திரைக்கதை, படத் தொகுப்பு, இயக்கம்  – ஆண்டனி,  கதை – ஜாய் மேத்யூ,  வசனம் – யூகி சேது, ஒளிப்பதிவு – M.S. பிரபு, இசை – நவின் ஐயர், பாடல்கள் – நா. முத்துக்குமார், கலை இயக்கம் – A. ராஜேஷ், நடன இயக்குநர் – சதீஷ், உடைகள் – ரமணா, ஒப்பனை – வேணு, ஸ்டில்ஸ் – R.S. ராஜா, மக்கள் தொடர்பு – நிகில்.

பிரபல இயக்குநர்கள்  ஷங்கர்,  A.R..முருகதாஸ்,  கெளதம் மேனன், விஜய்,  லிங்குசாமி  மற்றும்  கே.வி.ஆனந்த்  ஆகியோருடன் தொடர்ந்து  படத் தொகுப்பாளராக  பணியாற்றியுள்ள  எடிட்டர் ஆண்டனி, இந்த “ஒரு நாள் இரவில்” படம் மூலம்   இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘ஷட்டர்’ என்னும்  திரைப்படத்தின்  தமிழாக்கம்தான்  இந்த ‘ஒரு  நாள் இரவில்’  திரைப்படம் என்பது குறிப்படத்தக்கது.

‘நைட் ஷோ’ என்று முதலில் பெயரிடப்பட்ட இப்படத்தை பார்ந்த பல திரையுலக பிரபலங்கள், படம் ஜனரஞ்சகமான முறையில் விறுவிறுப்பாக இருப்பதால், தமிழில் வேறொரு பொருத்தமான பெயரை டைட்டிலாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறியுள்ளார்கள்.

இதன் விளைவாக இப்போது படத்தின் டைட்டிலை ‘ஒரு நாள் இரவில்’ என்று மாற்றம் செய்திருக்கிறார்கள் படக் குழுவினர். இந்தப் பெயர் கதைக்கு ஏற்றாற்போல் சிறப்பாக அமைந்துள்ளதாக அனைவரும் பாரட்டினர்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினரும், படக் குழுவினரை வெகுவாக பாராட்டி, படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏற்கனவே வெளியான படத்தின் முன்னோட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, தற்போது இந்த ‘ஒரு நாள் இரவில்’ என்கிற டைட்டிலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை கூட்டியுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.




error: Content is protected !!