கனடாவில் நடைபெற்ற தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழா..!

கனடாவில் நடைபெற்ற தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழா..!

தமிழில் 22 படங்களை இயக்கியிருக்கும் இயக்குநரான ஏ.வெங்கடேஷ், அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நேத்ரா’.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன் பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ். லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்.

IMG_6541

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம், கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தி காட்டினார்.

பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயத்தை, சின்ன தயாரிப்பாளர் மத்தியில்  அசாத்தியமான செயலை சாத்தியமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.

இந்த விழாவில் படத்தின் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.