‘நீயா-2’ படம் டிசம்பரில் வெளியாகிறது..!

‘நீயா-2’ படம் டிசம்பரில் வெளியாகிறது..!

1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் துரை இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற  படம் ‘நீயா’.

தற்போது ‘நீயா-2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.

‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீதர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக் கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

இத்திரைப்படம் அதித் தீவிரமான காதல் கதையை கொண்டது என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

‘நீயா’ படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, ‘நீயா-2’விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது.

‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை இந்தப் படத்தில் மறுஉருவாக்கமும் செய்திருக்கின்றனர்.

அதோடு, இசையமைப்பாளர் ஷபீரின் இசையில் ‘தொலையுறேன்’ பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று ‘இன்னொரு ரவுண்டு’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக நிறுவனமுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

‘நீயா-2’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது.