சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..! 

சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..! 

ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஜே.கே.ஹிட்லர் என்ற புதுமுக நடிகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, தானே நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘நீர்முள்ளி.’

படத்தில் நாயகியாக சுமா பூஜாரி நடித்திருக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, நளினி, வீரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் அகத்தியன் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – பால் பாண்டி, பாடல்கள், நடனம், இசை – நிர்மல், கலை இயக்கம் –       மணிவர்மா, தயாரிப்பு மேற்பார்வை – N.A.நாதன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – ஹிட்லர்.J.K.

படம் பற்றி இயக்குநரும், நடிகருமான ஜே.கே. ஹிட்லர் பேசும்போது, “நீர்முள்ளி’ என்பது வயல் வெளிகளில் காணப்படும் ஒரு முள் செடி. அதை அகற்றுவது சிரமம். முள் குத்திவிடும். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் அதிகம். அது போலதான் பெண்களும் சிறு தவறுகளை உணர்ந்துகொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் அதனால்தான் இந்தப் படத்திற்கு ‘நீர்முள்ளி’ என்று பெயரிட்டுள்ளேன்.

இந்தப்  படம் கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களை சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள். அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டமும் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந்தப் படம் கொடுக்கும். இது  பெண்களுக்கான  உணர்வுபூர்வமான சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தும்..” என்றார் இயக்குநர் ஹிட்லர்.J.K.




error: Content is protected !!