full screen background image

நயன்தாராவை கர்ப்பிணியா காட்ட விருப்பமில்லை – இயக்குநரின் வாக்குமூலம்..!

நயன்தாராவை கர்ப்பிணியா காட்ட விருப்பமில்லை – இயக்குநரின் வாக்குமூலம்..!

ரீமேக் என்றால் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் இவற்றுடன் கேரக்டர் ஸ்கெட்ச்சையும் சேர்த்துதான் ரீமேக் செய்வார்கள். மொழி மற்றும் மாநில கலாச்சாரத்திற்கேற்றாற்போல சில சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் கேரக்டர் ஸ்கெட்ச்சையே மாற்றிவிட்டு ஒரு படத்தை தைரியமாக தயாரித்திருக்கிறார்கள்.

ஹிந்தியில் ‘கஹானி’ என்ற பெயரில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தை இப்போது தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் ரீமேக் செய்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் இயக்குநரான சேகர் கம்முலாதான் இந்தப் படங்களையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் சேகர் கம்முலா, நடிகர் மஹத் கலந்து கொண்டார்கள்.

“வித்யாபாலன், நயன்தாரா இருவரில் யாரை நடிப்பில் பெஸ்ட்டா நினைக்கிறீங்க..? என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, சங்கடமாக சிரித்துவிட்டு “இரண்டுமே வேற வேற ஆக்ட்டிங்குதான்.. ஆனாலும் வித்யாபாலனைவிட நயன்தாரா சிறந்த நடிகைதான்.. அவர் இந்தப் படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம். கர்ப்பிணியா நடிச்சு அனுதாபத்தை ஈஸியா சம்பாதிச்சிரலாம். ஆனா சாதாரண தோற்றத்துல அதே போன்ற பாராட்டுக்களை பெறுவது சுலபமில்லை.. இதுல நயன்தாரா ஜெயிச்சிருக்காருன்னு நினைக்கிறேன்..” என்றார்.

கஹானியில் வித்யாபாலன் ஹீரோயின். கர்ப்பிணி வேடத்தில் நடித்திருந்தார். துர்கா பூஜை சமயத்தில் கொல்கத்தா வரும் வித்யாபாலன் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும் அவரைக் கண்டுபிடித்து தரும்படியும் போலீஸில் புகார் கொடுக்கிறார். தானாகவும் தேடத் துவங்குகிறார். இறுதியில் வேறொரு வித்தியாசமான டிவிஸ்ட் இருக்கும்..

வித்யாபாலன் கர்ப்பிணியாக அந்தச் சுமையை சுமந்து கொண்டு கணவரைத் தேடியலையும் விதத்தில் ஒரு மாதிரியான சோகச் சித்திரத்தை பார்ப்போரின் மனதிலெல்லாம் ஏற்றியிருந்தார்கள்.. படத்தில் அவருடைய கேரக்டர் மிகக் கவனமாக சித்தரிக்கப்பட்டு ரசிகர்களின் பரிதாப உணர்வை அவர் மீது செலுத்தியிருந்த்தால்.. கடைசியில் டிவிஸ்ட்டாகும்போது ‘அட’ என்ற உணர்வை கூடுதலாக கொடுத்திருந்தது.

ஆனால் இந்த ரீமேக்கில் வித்யாபாலனாக நடிக்கும் நயன்தாரா கர்ப்பிணி வேடத்தை ஏற்கவில்லையாம்.. அது பற்றி இயக்குநர் சேகர் கம்முலாவிடம் கேட்டதற்கு, “அதுவொன்றும் பெரிய விஷயமில்லை. ஏற்கெனவே செய்ததையே திருப்பிச் செய்யணுமான்னும் யோசிச்சோம். தென்னகச் சினிமாவில் அந்த கர்ப்பிணி வேஷம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைத்தோம். அதனால்தான் அதனைத் தவிர்த்துவிட்டோம்..” என்றார்.

தமிழகத்து ரசிகர்களைப் பற்றியும், தாய்க்குலங்களை பற்றியும் சேகர் கம்முலாவுக்குத் தெரியலை போலிருக்கு..!

Our Score