பரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்

பரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்

Banner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘நடுவன்’.

இந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அறிமுக நாயகியான அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருக்கும் கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், சார்லி, யோக்ஜிபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜாராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், பாடல்கள், கார்க்கி, டாக்டர் பர்ன், ‘மிர்ச்சி’ விஜய், படத் தொகுப்பு – சன்னி சவரவ், கலை இயக்கம் – வி.சசிகுமார், இணை தயாரிப்பு – மது, தயாரிப்பாளர் – LUCKY CHHAJER.

‘இனிது இனிது’, ‘இசக்கி’, ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த ‘நடுவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.