சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் ‘நாடோடிகள்-2’ துவங்கியது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் ‘நாடோடிகள்-2’ துவங்கியது.

2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில்    ‘நாடோடிகள்–2’ திரைப்படம் இப்போது உருவாகவுள்ளது. 

இந்தப் படத்தில்  அஞ்சலி,  பரணி,  அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர்,  நமோ நாராயணன், கு.ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, படத் தொகுப்பு – ரமேஷ், பாடல்கள் – யுகபாரதி, சண்டை பயிற்சி –  திலீப் சுப்பராயன், நடனம் – திணேஷ், ஜானி, மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை மதுரையில் பூஜையுடன் துவங்கியது.

314A8434 (1) 314A8453

 
error: Content is protected !!