பரபரப்பாக படமாகி வரும் ‘நாடோடிகள்-2’ திரைப்படம்

பரபரப்பாக படமாகி வரும் ‘நாடோடிகள்-2’ திரைப்படம்

2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள்– 2’ உருவாகி வருகிறது. 

இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,  கு.ஞானசம்பந்தம்,  துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்தமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, படத் தொகுப்பு – ரமேஷ், பாடலாசிரியர் – யுகபாரதி, சண்டை பயிற்சி –  திலீப் சுப்புராயன், நடனம் – திணேஷ், ஜான், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி , தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன். தயாரிப்பு  –  எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம்  – சமுத்திரக்கனி.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9-ம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.

11-ம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறது.