காதலை எதிர்க்கும் கிராமம் பற்றிய படம்தான் ‘நாடோடி கனவு’..!

காதலை எதிர்க்கும் கிராமம் பற்றிய படம்தான் ‘நாடோடி கனவு’..!

ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நாடோடி கனவு’.

இதில் நாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக சுப்ரஜா நடித்துள்ளார். மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். சீர்காழி சிற்பி, அண்ணாமலை இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். படத் தொகுப்பு – கிரேசன், கலை – ராம்ஜி, நடனம் – சிவசங்கர், அஜய், சதீஸ், செல்வி, மக்கள் தொடர்பு – சரவணன். N, ஒளிப்பதிவு – ஜிஜு, எழுத்து, இயக்கம் – வீர செல்வா.

பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் படக் குழுவினர்.

இப்படத்தில் இடம்பெறும் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது, கதாநாயகி சுப்ரஜாவிற்கு விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடனே ஓய்வெடுக்காமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக் குழுவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் நாயகி சுப்ரஜா. 

இப்படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.