‘நாதிரு தின்னா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் பெண் இயக்குநர்..!

‘நாதிரு தின்னா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் பெண் இயக்குநர்..!

எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தனீஷ் பாபு தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நாதிரு தின்னா.’

இத்திரைப்படத்தில் புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகா ப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண் மாஸ்டர், ‘வெள்ளரிக்கா’ புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சி.எஸ்.சாய்மணி கலையையும், ஆர்.கேசவன் படத் தொகுப்பையும், ஸ்ரீதர் ஒளிப்பதிவையும், ரவி பெல்லூரு இணை தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

கே.வி.மகாதேவன், ஷ்யாம், வந்தே மாதரம், உபேந்திரகுமார், சக்ரி முதலான இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய முரளீதர் ராகி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

IMG-20180912-WA0022

பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமாகி சத்யராஜ், பிரபு, கார்த்திக், பாலகிருஷ்ணா, ராம்சரண் படங்களில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, போஜ்பூரி, ஒரியா மொழி படங்களில் ஏறக்குறைய 800 படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றிய சொர்ணா இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் சொர்ணா பேசும்போது, “ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவவயது வரையிலான காலக்கட்டத்தில் அவர்களுக்குள் நடைபெறும் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம் காதல், மோதல், உரசல் ஆகிய உணர்வுகளை மையக் கருவாக கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில் தற்போதைய இளைய சமூகத்தினருக்கு பிடிக்கும்வகையில் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்..” என்றார் பெருமையுடன்.