தமிழ்த் தேசியம் பற்றிப் பேச வரும் ‘நான்கு கில்லாடிகள்’ திரைப்படம்..!

தமிழ்த் தேசியம் பற்றிப் பேச வரும் ‘நான்கு கில்லாடிகள்’ திரைப்படம்..!

காக்டெயில் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘நான்கு கில்லாடிகள்’.

இந்த நிறுவனம் ஏற்கெனவே ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.

தமிழ்த் தேசிய குறியீட்டு படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. மேலும், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் கதையை இராஜமோகன் மற்றும் சிவக்குமார் இணைந்து எழுத, இராஜமோகன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

naangu killaadigal movie stills

இத்திரைப்படத்தில் இசக்கி பரத், அறிமுக நாயகி தியா, டேனியல், தம்பி ராமையா, கோவை சரளா, A.வெங்கடேஷ், ‘காதல்’ சரவணன் மற்றும் ‘மெட்ராஸ்’ நந்தகுமார், இயக்குநர் நாகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருகிறது.

இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, ராஜ்குமார் ஒளிபதிவாளராக அறிமுகமாகிறார். படத் தொகுப்பு – கார்த்திக். சண்டை இயக்கம் – சில்வா, நடன இயக்கம் – அஜய் ராஜ், சந்தோஷ், பாடல்கள் – சினேகன், வடுகம் சிவக்குமார், மோகன் ராஜ், மக்கள் தொடர்பு – சி.என்.குமார், திரைக்கதை, வசனம், இயக்கம் – இராஜ்மோகன்.

naangu killaadigal movie stills

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தேனி, இடுக்கி, பெரியகுளம், மூணாறு, ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது. இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
error: Content is protected !!