பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’

இயக்குநர் பாலா ஒரு வழியாக தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார்.

‘நாச்சியார்’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஜோதிகாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

தனது பி ஸ்டூடியோஸ் சார்பில் பாலாவே இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே ஜோதிகா, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாவை நன்கு புரிந்து வைத்திருக்கும் இசைஞானி இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

naachiyaar-poster-1

இதற்கு முன்னர் பாலா, ‘குற்றப் பரம்பரை’ நாவலை படமாக்கப் போகிறேன் என்று சொல்லி இதற்காக நான்கு மொழி கலைஞர்களையும் படத்திற்காக புக் செய்தார். ஆனால் அந்தப் படம் துவக்கப்படவே இல்லை.

அடுத்து புதுமுக ஹீரோவான ‘சாட்டை’ யுவனை வைத்து ஒரு சின்ன பட்ஜெட் படத்தினை இயக்குவதாக செய்திகள் வந்தன. இது என்னவானது என்றும் தெரியவில்லை.

இதற்கிடையில் இந்த ‘நாச்சியாரும்’ கிளம்பியிருக்கிறார். 

படத்தின் படப்பிடிப்பு நாட்கள் எத்தனை நாட்கள்.. எ்ப்போது முடியும் என்பதெல்லாம் தெரியாமல் ‘ஜோ’ இதில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டார் என்பதால் இந்தப் படம் மட்டும் பாலாவின் கேரியரிலேயே சீக்கிரமாக முடியும் என்று நம்பலாம்.

பார்ப்போம்.. எது முதலில் வருகிறதென்று..?!