“எனக்கு 19. ஆண்ட்ரியாவுக்கு 25. அதுனால பிரிஞ்சி்ட்டோம்.” – அனிருத்தின் ஓப்பன் வாக்குமூலம்..!

“எனக்கு 19. ஆண்ட்ரியாவுக்கு 25. அதுனால பிரிஞ்சி்ட்டோம்.” – அனிருத்தின் ஓப்பன் வாக்குமூலம்..!

நடிகை ஆண்ட்ரியாவுடன் இருந்த காதல் குறித்து ‘குமுதம்’ இதழில் எழுதி வரும் தனது வாழ்க்கை சரிதம் தொடரில் இந்த வாரமும் தொடர்ந்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.

அது இங்கே :

“முதல் காதல் முறிந்து, என்னோட செகண்ட் லவ் ஆரம்பமாகும்போது எனக்கு 19 வயசு. சரி வயசைக் காட்டி மனசை மடக்க முடியுமா..? பார்த்தும் பிடிச்சிருந்தது. உடனே பழக ஆரம்பிச்சோம். எனக்கு 19 வயசு இருக்குறப்பா நான் லவ் பண்ணின அந்தப் பொண்ணுக்கு 25 வயசு. அன்னைக்கு எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன மெச்சூரிட்டி இருந்திருக்கும்..? அதை இப்ப நினைச்சுப் பார்த்தா சிரிப்பதா அழுவதான்னு ஒண்ணுமே புரியலை..

சினிமாவுக்கு மியூஸிக் டைரக்டராக வந்த பிறகு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கிக் கொடுத்தேன். கூடவே என் இரண்டாவது லவ்வருக்கும் அன்புப் பரிசா முதன்முதலா ஒரு ஹேண்ட்பேக் வாங்கிக் கொடுத்தேன்.

என்ன பிரச்சினை.., என்ன மனஸ்தாபம்ன்னு எதுவுமே இப்போ கிளியரா ஞாபகம் இல்லை. எங்களுக்குள்ள வயசு வித்தியாசம்தான் பெரிய இடைஞ்சலா இருந்தது. பேசிப் பார்த்தோம். ஒர்க் அவுட் ஆகும்னு தோணலை. உடனே பிரேக்கப் கொடுத்திட்டோம்.

நம் வாழ்க்கையில் ஏற்பட்ட எந்தவொரு கெட்ட அனுபவத்திற்கும் நாம நன்றிக்கடன்பட்டிருக்கோம். ஆனால் பலரும் நல்ல விஷயத்துக்கு மட்டும்தான் நன்றி சொல்லணும்ன்னு நினைக்குறாங்க.

காதலைப் பொறுத்தவரை.. அதுவும் உண்மையான காதலைப் பொறுத்தவரை கசப்பான அனுபவங்களுக்கும் நாம நன்றி சொல்லக் கத்துக்கணும். ஒவ்வொரு முறையும் சொல்லணும். வாழ்நாள் முழுவதும் சொல்லணும். அதுதான் சரி. நாம ஒருத்தரை உண்மையா நேசித்தோம் என்பதற்கு அதுதான் அடையாளம்..

என் நல்லது, கெட்டது எல்லாவற்றிற்கும் ஆண்ட்ரியாவிற்கு இந்த நேரத்தில் கெளரவமா ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். கூடவே ‘ஸாரி’யும் சொல்லிக் கொள்கிறேன். எதற்கு ஸாரி..? எதற்கு நன்றி..? தெரியலை.. சொல்லணும்னு தோணுது. சொல்லிவிடுவோம்.

திரும்ப அவங்க என் இசையில் பாட வந்தப்ப பலரும் ‘திரும்ப சேர்ந்தாச்சா..? பிரிஞ்சு போன நீங்க மறுபடியும் பார்த்தப்ப என்ன பேசிக்கிட்டீங்க?’ன்னு கேட்டாங்க. அவங்க பாட வரும்போது, நான் ஸ்டூடியோவில் இருக்கவே கூடாதுன்னு முடிவெடுத்தேன். நான் இல்லாத சமயத்துல வந்தாங்க. பாடினாங்க. கிளம்பிட்டாங்க. என் அஸிஸ்டெண்ட்டுதான் அவங்க வாய்ஸை ரெக்கார்ட் பண்ணினார். ஸோ, நான் அவங்களை பார்க்கவே இல்லை.

எது எப்படியோ..? காதல் உணர்வை லேசா கட்டுப்படுத்திட முடியுமா ப்ரோ..? திரும்பவும் யாரையாவது லவ் பண்ணணும்னு இப்பத் தோணுது. கட்டாயம் லவ் பண்ணுவேன். இந்த முறை லவ் பண்ணும்போது பொண்ணுக்கு என்னைவிட மூணு வயசு குறைவா இருக்கான்னு முதல்ல கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா லவ் பண்ணலாம்ன்னு முடிவெடுத்திருக்கேன்..” என்று சொல்லியிருக்கிறார் அனிருத்.

இத்தோட முடிப்பாரா இல்லாட்டி.. அந்த முத்தக் காட்சியைப் பற்றியும் சொல்வாரான்னு தெரியலை.. அடுத்த வாரம்வரைக்கும் வெயிட் பண்ணுவோம்..!

அதென்ன மூணு வயசு கம்மி என்ற நிபந்தனை..? ஆணாதிக்கம்ன்னு திட்டப் போறாங்க அனிருத் ஸார்..!!!