புதுமுக இயக்குநருக்கு இளையராஜாவின் அறிவுரை..!

புதுமுக இயக்குநருக்கு இளையராஜாவின் அறிவுரை..!

ஆலயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அன்பரசன் தயாரிக்கும் படம்  ‘முன் பதிவு’.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார். தமிழ், விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் கூத்துப்பட்டறைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.

 படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணியாற்றியவர். படத் தொகுப்பினை பீட்டர் பாபியா செய்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார். இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர். இவர் இயக்குநர் துளசிதாஸிடம் பல படங்களில் இணை இயக்குநராகப் பணி புரிந்த அனுபவம் கொண்டவர். சென்ற ஆண்டு தமிழில் வெளிவந்த ‘திரைக்கு வராத கதை’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

ilayaraja

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜி.எம்.துரைப்பாண்டியன், “இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை  பாலினக் கவர்ச்சி என்கிற பிரச்சினைதான். பால்யப் பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு  தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக் கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் இந்த முன் பதிவு திரைப்படம்.

இந்தக் கதையை ‘இசைஞானி’ இளையராஜா கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.  கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அது. இளையராஜா இசை அமைக்கச் சம்மதித்ததும் படத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது…” என்றார்.

‘இசைஞானி’ இளையராஜா படத்திற்காக ஒரு பாடலைப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். வரும் ஜூன் 26-ம் தேதி மற்ற பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளன.




error: Content is protected !!