மின்னல் வேகத்தில் தயாராகியிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ திரைப்படம்..!

மின்னல் வேகத்தில் தயாராகியிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ திரைப்படம்..!

எந்த தொழில் நமக்கு சோர்வே தராதோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம்தான் ‘Mr.சந்திரமௌலி’.

இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கின்றது. 

கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் C.S. இசையில், ரிச்சர்ட் M.நாதன் ஒளிப்பதிவில், T.S.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில், திருவின் இயக்கத்தில் இந்த ‘Mr.சந்திரமௌலி’ திரைப்படம் உருவாகி வருகிறது.

சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலுடன் இப்படம் வளர்ந்து வந்திருக்கிறது.

mr.chandramouli

இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக் குழுவினர் தற்போது தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர்.

எங்கள் படக் குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் Post production பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம்.

‘Mr.சந்திரமௌலி’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.  

இது தமிழ் ரசிகர்களுக்கு கோடை விடுமுறையில் ஒரு மெகா விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்..” என்றார் உற்சாகத்தோடு..!