full screen background image

நான் தாலி கேக்கலை.. அவர்தான் கட்டினார்..! – மெளனிகாவின் கண்ணீர் பேட்டி

நான் தாலி கேக்கலை.. அவர்தான் கட்டினார்..! – மெளனிகாவின் கண்ணீர் பேட்டி

கேமிரா கவிஞர் பாலுமகேந்திராவின் மூன்றாவது மனைவியான நடிகை மெளனிகா, பாலு மகேந்திரா பற்றி ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இருந்து ஒரு சில பகுதிகள்..!

“பதினெட்டு வயசுல முதன்முதலா அவரைப் பார்த்தேன். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்துக்கான ஆர்ட்டிஸ்ட் செலக்சன் அது. பாவாடை, தாவணியில் போயிருந்த எங்கிட்ட, “மாடர்ன் டிரெஸ் இருக்கா..?”ன்னார். இல்லைன்னதும் அவரோட பையன் ஷங்கி டிரெஸ்ஸை எடுத்திட்டு வந்து போட்டுக்கச் சொல்லி என்னைப் படம் பிடிச்சார். அவரோட பார்வை, பேச்சு, ஆளுமை, அந்த்த் தொப்பி எல்லாமே அப்பவே என்னை ஏதோ செஞ்சது.  ஆனாலும் ஏற்கெனவே கல்யாணாமான ஒருவர் மேல என்னோட அந்த அபிப்ராயம் தப்புதான். அந்த வயசுக்கே உரிய ஆர்வத்துல புத்திக்கு சரியா தப்பான்னு தெரியாமப் போயிருச்சு. அந்தப் படத்துல ரஜினிக்கு தங்கச்சியா சின்ன ரோல் தந்தார். அத்தோட எங்க உறவு முடிஞ்சிருக்கலாம். விதி யாரை விடும்..?

mounika-4

அடுத்த்தா ‘யாத்ரா’ங்கிற மலையாளப் படத்துல வாய்ப்பு தந்தார். அதே படத்தை தெலுங்குலேயும் பண்ணினார். தொடர்ந்து அவரோடவே இருந்த நாட்கள் வயசு வித்தியாசத்தைத் தாண்டி அவரை எந்நேரமும் நினைக்க வைச்சது. என் நினைப்பு அவருக்கும் அரசல் புரசலா தெரிஞ்சிருக்கணும். திடீர்ன்னு ஒரு நாள், “எப்ப கல்யாணம் பண்ணப் போற…?”ன்னு கேட்டார். “ஐடியா இல்லை”ன்னு சொன்னேன். “ஏன்.. யாரையாச்சும் லவ் பண்றியா..?”ன்னார். பட்டுன்னு பதில் சொன்னேன். “உங்களைத்தான்”னு.. “பைத்தியமா..?”ன்னு கேட்டுட்டு அந்த இடத்துல இருந்து போயிட்டார்.

mounika-5

அந்த நிமிஷத்துல இருந்து சூழ்நிலைகளை எனக்குச் சாதமாக்கிக்கிட்டேன். தொடர்ந்து வாய்ப்பு தந்தா அவருக்கும் நம் மேல பிரியம் இருக்குன்னு நினைச்சேன். அதே போல நடந்த்து.. என்னை விலக்கவும், என்னைவிட்டு அவர் விலகவும் முயற்சி பண்ணலை. இது போதாதா..? தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பிச்சேன். விடாம துரத்தினேன். “எங்கூட வாழணும்ன்னா சில தியாகங்களைப் பண்ணனும்..”னார். அப்பா வயசுல இருக்குற ஒருத்தர் மேல அன்பு வருதுன்னா அது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பு இல்லைங்கிறதை நான் புரிஞ்சுக்கிட்டதால “எந்த கண்டிஷனுக்கும் ஓகே”ன்னு சொல்லிட்டேன். எனக்கு அவர் கூடவே இருக்கணும். அவ்வளவுதான்..!

mounika-3

அவரோட வாழ ஆரம்பிச்சிருந்த பிறகும், அகிலாம்மா அவங்க வீட்ல ஒருத்தியாத்தான் என்னை நினைச்சாங்க. நல்லது பொல்லதுக்கு அவங்க வீட்ல நான் இல்லாம இருக்க மாட்டேன். என்னோட சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கும் அவங்க வந்து போவாங்க. அப்படி இருக்கையிலதான் என்னோட தாய் மாமன் ஒருத்தர் இறந்துட்டார். அவருக்கு இரண்டு மனைவிகள். அவரோட உடலை பார்க்க இரண்டாவது மனைவி வந்தப்ப, அங்க சிலர் அவங்களை வரக் கூடாதுன்னு விரட்டினாங்க. எங்கூட அங்க வந்திருந்த இவருக்கு, இந்தச் சம்பவத்தைப் பார்த்ததுல இருந்து மனசு கெடந்து தவிச்சிருக்கு.. எங்கிட்ட கேக்காமலேயே எங்க அம்மாவைக் கூப்பிட்டு, “தாலி எங்க வாங்கணும்..?”னு கேட்டு வாங்கிட்டு வந்துட்டார். இப்ப யாரும் நம்புறாங்களோ இல்லையோ.. இதுதான் உண்மை.

mounika-6

நானா அவரை தாலி கட்டச் சொல்லி வற்புறுத்தவே இல்லை. அவர்தான் “உன் நல்லதுக்குத்தான்”னு சொல்லி என்னைப் பேசவே விடலை. அவர் கிறிஸ்டியனா இருந்தாலும் எங்க வழக்கப்படி சிவன் கோவிலுக்கு வந்து என் கழுத்துல தாலி கட்டினார். இது எனக்கும் அவருக்குமான முறையான மண வாழ்க்கையா இல்லாட்டியும், ஒவ்வொரு நாளையும் அனுபவிச்சு வாழ்ந்தோம். என்கூட கடைக்கு வருவார். எனக்குச் சமைச்சுத் தருவார். என்னை விதவிதமா போட்டோ புடிச்சு ஷோபா சாயல் உங்கிட்டேயும் இருக்கும்பார்.. பரஸ்பரம் ஒருத்தொருக்கொருத்தர் குழந்தை மாதிரி பாசத்தை பரிமாறி வாழ்ந்தோம்.

`எல்லாத்தையும் காலி பண்ணினதும் அந்த மனுஷன்தான். இப்படியே இருந்திட்டுப் போயிடறேன்னு எவ்வளவோ சொன்னேன். கேக்கலை. திடீர்ன்னு ஒரு நாள் பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு “மெளனிகாவும் என்னோட மனைவிதான்”னு சொல்லிட்டார். அன்னில இருந்து இன்னிக்குவரைக்கும் அவரோட வீட்டு வாசலை என்னால மிதிக்க முடியலை.. ஆனா, இப்பவும் அகிலாம்மாவும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.

‘சினிமா பட்டறை’ ஆரம்பிச்ச பிறகு என்னைவிட்டு விலக ஆரம்பிச்சது போல தெரிஞ்சது. வீட்டுக்கு வர்றது குறைஞ்சது. நான் கேட்டதுக்கு ‘அப்படியெல்லாம் இல்லையே’ன்னார். ஆனா, “எனக்குப் பிறகு அவ ஆதரவில்லாம இருக்கக் கூடாது. நான் வெறுத்து ஒதுக்கினா நல்ல முடிவெடுத்து கல்யாணம் பண்ணினாலும் பண்ணிருவா”ன்னு நெருக்கமான ஒருத்தர்கிட்ட சொல்லியிருக்கார். இன்னொரு பெண்ணோட கணவரா இருந்தாலும் இவர்தான் வேணும்ன்னு வந்தவ.. இனிமேல்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனாக்கும்..? ஏதோ அவருக்கு என் மேலான அக்கறை..

இதுக்கிடைல இன்ஸ்ட்யூட்ல படிக்க வந்த இருபது வயசு பெண்ணை தத்தெடுக்கப் போறதா அவர் சொன்னப்ப, அவர்கிட்ட சண்டை போட்டேன். அந்தக் கோபத்துல கடைசி ஆறு மாசமா பேசலை. அதுகூட தப்போன்னு இப்பத் தோணுது. கடைசி நாட்கள்ல பேசாமலேயே போயிட்டாரே..”

நன்றி : குமுதம்

இதில் யாரைக் குற்றம் சொல்வது..?

Our Score