காவல்துறை அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்தான் கதை..!

காவல்துறை அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்தான் கதை..!

பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88-வது படம் இது.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் சத்யராஜும், நாயகியாக நிக்கி கல்ராணியும் நடிக்கின்றனர். இவர்களுடன் கோவை சரளா, சதீஸ், ஸ்ரீமன், தம்பிராமைய்யா, மனோபாலா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், தேவதர்ஷினி, சுகன்யா, சாம்ஸ், மயில்சாமி, மகாநதி சங்கர், கும்கி அஸ்வின், பாண்டு, மதன்பாப், காக்கா முட்டை ரமேஷ், வைஷ்ணவி திருநங்கை ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வத் தோஸ்ராணா, வம்ஷி கிருஷ்ணா, சரண்தீப் ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். ராய்லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி, வசனம் – ஜான் மகேந்திரன், சாய்ரமணி, இசை – அம்ரிஷ். பாடல்கள் – வைரமுத்து, விவேகா, சாய்ரமணி, சொற்கோ, லோகன். கலை – செல்வகுமார், எடிட்டிங் – பிரவீன்.கே.எல்., சண்டை பயிற்சி – சிறுத்தை கே.கணேஷ் , நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், மோகன் கிஷோர், தயாரிப்பு – ஆர்.பி.சௌத்ரி, திரைக்கதை, இயக்கம் – சாய்ரமணி.

“இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம் நடக்கிறது. இரண்டு அதிகாரிகளுக்குள் உண்டான மோதலில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கிறான் சமூக விரோதி ஒருவன். அவனது எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பது பரபரப்பான திரைக்கதை!

ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் கதாபாத்திரம் அவருக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கும். பக்கா கமர்ஷியல் படம்தான் இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா” என்றார் இயக்குநர் சாய்ரமணி.

படத்தை உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார்.




error: Content is protected !!