ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்புக்கு கை மாறிய மொட்ட சிவா கெட்ட சிவா டைட்டில்..!

ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்புக்கு கை மாறிய மொட்ட சிவா கெட்ட சிவா டைட்டில்..!

பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா.’ இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87-வது படமாகும். 

வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடவிருக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் கல்யாண் ராம் நடித்து சூப்பர் ஹிட்டான ‘பட்டாஸ்’ என்கிற படத்தின் ரீமேக்குதான் இது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘வேந்தர் மூவீஸ்’ இதே பெயரில் ஒரு படத்தைத் தயாரிப்பதாக இருந்த்து. இந்த நிலையில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்கிற தலைப்பு இந்த ‘பட்டாஸ்’ படத்தின் ரீமேக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் இயக்குநர் சாய்ரமணி இருவரும் கேட்டுக் கொண்டதால் ‘வேந்தர் மூவீஸ்’ மதன்  இந்த தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மற்றும் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் சதீஷ், தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி. இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற பட்டாஸ் என்ற படத்தின் ஒளிப்பதிவாளர்.
வசனம் – ஜான் மகேந்திரன்

இசை – அம்ரிஷ். இவர் நடிகை ஜெயசித்ராவின் மகன்

கலை – செல்வகுமார்

எடிட்டிங் – பிரவீன்.கே.எல்

ஸ்டன்ட் – கணேஷ். இவர் சிறுத்தை படத்திற்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – சாய்ரமணி . இவர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கியவர்.

தயாரிப்பு – ஆர்.பி.சௌத்ரி

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18-ம் தேதி சென்னையில் துவங்கி முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மேலும் இந்தப் படம் ஹைதராபாத், ஹாங்காங், சுவிட்சர்லாந்து போன்ற இடங்களில் அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது.




error: Content is protected !!