‘மொசக்குட்டி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

‘மொசக்குட்டி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

'மைனா', 'சாட்டை' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் 'மொசக்குட்டி.'

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு - சுகுமார்

இசை - ரமேஷ் விநாயகம்

எடிட்டிங் - ஆண்டனி

நடனம் - நோபல்

கலை - பிரபாகர்.எம்

ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர்

தயாரிப்பு - ஜான்மேக்ஸ்

கதை, திரைக்கதை, வசனம் , இயக்கம் - எம்.ஜீவன்

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இரண்டே இரண்டு 'கட்'டுகளுடன் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். படம் வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.