பணச் செல்லாமையின்போது நடந்த உண்மைச் சம்பவங்களை சொல்லும் ‘மோசடி’

பணச் செல்லாமையின்போது நடந்த உண்மைச் சம்பவங்களை சொல்லும் ‘மோசடி’

J.C.S. மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மோசடி.’

இந்தப் படத்தில் விஜூ என்ற புதுமுகம் நாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – R.மணிகண்டன், இசை – ஷாஜகான், பாடல்கள் – மணி அமுதவன், கே.ஜெகதீசன், படத் தொகுப்பு – S.M.V.சுப்பு, கோபி ராம்நாத், நடன இயக்கம் – விமல், பாலா, தயாரிப்பு – J.C.S.மூவீஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்.

படம் பற்றி இயக்குநர் கே.ஜெகதீசன் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

கடந்த 2016- ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.

அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி  500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள்? அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள்? இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள்? இந்த அறிவிப்பு சரியா..? தவறா..? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்..” என்றார்.




error: Content is protected !!