தாய்-மகள் பாசப் போராட்டமே ஸ்ரீதேவியின் ‘மாம்’ திரைப்படம்

தாய்-மகள் பாசப் போராட்டமே ஸ்ரீதேவியின் ‘மாம்’ திரைப்படம்

நடிகை ஸ்ரீதேவி நடித்திருக்கும் புதிய படமான ‘மாம்'(அம்மா) அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ரவி உதயவார் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீதேவியுடன், அக்சய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.

Mom (7)

நாயகியான தேவகி சபர்வால் கணவர் ஆனந்த் மற்றும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும், பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ உண்மையான மன மகிழ்ச்சி அவருக்கு அப்போதுவரையிலும் கிடைக்கவில்லை. தேவகிக்கும், அவளுடைய மூத்த மகளான ஆர்யாவுக்கும் இடையில் நெருங்கி அன்பில்லை. பாசமில்லை. நெருக்கமில்லை. இது ஒன்றே தேவகியை அவளிடமிருந்து அன்னியப்படுத்துகிறது.

தேவகியும் தன் மகள் ஒரு நாள் தன்னைப் புரிந்து கொள்வாள் என பொறுமையாகக் காத்திருக்கிறாள். இந்த சூழலில் திடீரென நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு, இருவருக்குமிடையேயான உறவில் சரி செய்ய முடியாத ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. 

தனக்கும், மகளுக்குமான பாசப் போராட்டத்தில் ஜெயிக்க   போராடுகிறாள் தேவகி. ஜெயித்தாளா இல்லையா என்பதுதான் இந்த புதுமையான ‘மாம்’ என்ற படத்தின் கதைச் சுருக்கம்.

ஸ்ரீதேவி கபூர் முக்கிய கதாபாத்திரமான தேவகி சபர்வாலாக நடித்துள்ளார். இரு அழகான பெண் குழந்தைகளின் தாயாய், ஒரு வேலைக்கு போகின்ற வயதான பெண்மணியாய் உலா வருகிறார்.

Mom (1)

மேத்யு பிரான்சிஸ், என்னும் ஒரு குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரியாக அக்ஷய் கண்ணா களமிறங்குகிறார். ஒரு குற்றவாளி விடுதலையானால் அடையும் வெறுப்பைவிட வேறு யாராவது தன் வேலையை செய்தால் அதிக வெறுப்படைபவர். நேர்மையும், சுய நீதியும் கொண்ட மேத்யு, தன் வாழ்வின் மிக கடினமான, சவாலான இந்த வழக்கை சந்திக்கிறார்.

Mom (12)

தேவகியின் கணவர், ஆனந்த் சபர்வாலாக அத்னான் சித்திக் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மனைவியின் மீதும், இரு மகள்களின் மீதும், நிபந்தனையற்ற நிறைவான அன்பு செலுத்தும் ஒரு மனிதர். அந்த துயர சம்பவம் நிகழ்ந்தபோது, தன் மகளுக்கு ஒரு நம்பிக்கையாய், பலமாய், தைரியம் சொல்லித் தேற்றும் நடிப்பில் கண் கலங்க வைத்திருக்கிறார்.  

ஆர்யா சபர்வாலாய் சஜல் அலி நடித்துள்ளார். எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆர்யா, தன் தந்தையிடம் பேரன்பு கொண்டிருகிறாள். தன்னுடைய தங்கை, பிரியாவை அன்புடன் வரவேற்கும் ஆர்யாவால், ஏனோ தன்னுடைய தாயை ஏற்று கொள்ள முடியவில்லை. உற்சாகமாகவும், கொஞ்சம் முரட்டு புத்திசாலித் தனத்துடனும் வலம் வரும் ஆர்யா, அந்த துயர சம்பவத்திற்கு பின் உடைந்து, நொறுங்கிப் போகிறாள். நம்பிக்கையைத் தேடித் தன் வாழ்வின் மீதியையும் தொலைத்துக் கொண்டிருக்கிறாள்.

தேவகியின் இளைய மகள் பிரியாவாக சபர்வாலாய் ரீவா அரோரா நடித்திருக்கிறார். இந்த துறுதுறு சுறுசுறு அழகி, அனைவரது கண்களையும் கவனத்தையும் கவர்ந்து, கலகலப்பூட்டும் ஒரு பைங்கிளி. பிரியா குடும்பச் சூழலில் ஏதோ ஒரு அசௌகரியம் நிலவுவதைப் புரிந்துகொண்டு, சிரிப்பையும், சந்தோஷத்தையும் மீட்க முயற்சிக்கிறாள்.

Mom (4)

தயாசங்கர் கபூர், சுருக்கமாக – டிகே என எல்லோராலும் அழைக்கப்படும் வேடத்தில், நவாசுதீன் சித்திக் மிளிர்கிறார். தார்யகஞ்ச்சின் மிக நெருக்கடியானப் பகுதியில் தூசி படிந்த ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து கொண்டும், ஒரு ஆபத்தான ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டும், சிறிய அளவிலான துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு துப்பறியும் நிபுணர். நகைச்சுவையான இவர், உணர்ச்சிவயப்பட்டு தன்னுடைய சக்திக்கு மீறிய ஒரு வழக்கில் தன்னை இணைத்து கொள்கிறார்.

எல்லோராலும் வெகுவாக பாராட்ட பெற்ற ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்திய திரையுலகின் ‘நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா’ விழாவில் சேகர் கபூரால் இயக்கப் பெற்ற இத்திரைப்படம், சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டு கௌரவிக்கப்பட்டது.

Mom (8)

ராஜ்குமார் சந்தொஷி இயக்கத்தில், 2000-ல் இவர் தயாரித்து வெளிவந்த ‘புகார்’, திரைத் துறையின் உயரிய விருதான,  இரண்டு தேசிய விருதுகளை வென்றது.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2002-ல் வெளிவந்த ‘கம்பெனி’, தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பதினோரு பிரிவுகளில், ஆறு பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது.  இத்திரைப்படம், 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்டின் திரைப்பட விழாவிலும், நியூயார்க்-ஆசிய திரைப்பட விழாவிலும், வெகுவான பாராட்டுகளையும் பெற்றது.

போனி கபூர் தயாரித்து 1997-ல் வெளிவந்த ‘ஜுடாய்’ ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். இவர் தயாரிப்பில் 2005-ல் வெளிவந்த ‘தி காமெடி’, ‘நோ என்ட்ரி’ மாபெரும் வசூலை வாரி குவித்தது. 2009-ல் சல்மான்கானை கதாநாயகனாக நடிக்க வைத்து அவர் தயாரித்த “wanted” அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து, இந்தியாவில் மட்டும் சுமார்  100 கோடியும், அயல்நாடுகளில் சுமார் 26 கோடியும் விற்பனையாகி வசூல் சாதனை படைத்தது. 

போனி கபூர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள், இன்று ஹிந்தி திரையுலகின்  முன்னணி திரை நட்சத்திரங்களாக உலா வருகின்றனர். அவர் ‘வோஹ் சாத் தின்’ மூலம் அனில் கபூரையும், ‘கோயி மேரே தில் சே பூச்சே’ மூலம் இஷா தியோலையும், ‘ப்ரேம்’ மூலம் சஞ்சய் கபூரையும், தபுவையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Mom (2) 

அவருடைய ஆரம்ப காலங்களில் தயாரித்த ‘ஹம் பான்ச்’, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அம்ரிஷ் பூரி இருவருக்கும் ஹிந்தி திரை உலகில் தங்களை நிலைப்படுத்தி கொள்ள பெருமளவில் உதவியது.

முப்பது திரைப்படங்களுக்கு மேல் தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்திகொண்ட போனி கபூரின் சமீபத்திய படைப்பான ‘மாம்’ வரும் ஜூலை 7-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இத்திரைப்படம் அவரது மனைவியும், பழம்பெரும் நடிகையுமான ஸ்ரீதேவியின் 300-வது திரைப்படம் மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் 50 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையின் முத்தாய்பாகவும் அமைகிறது.




error: Content is protected !!