எஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’

எஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’

சத்தி என் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மிஸ்டர் டபிள்யூ’.

இந்தப் படத்தில் எஸ்.பி.சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கலை இயக்கம் – மிலன், படத் தொகுப்பு –  லாரன்ஸ் கிஷோர், நடன இயக்கம் – அருள் கோவன், அசார், ஒளிப்பதிவு – தமிழ், நிரன் சந்தர், தயாரிப்பு நிர்வாகம் – தினேஷ், ரகு, பாடல்கள் – வல்லவன், அருண் பாரதி, கோசேஷா, இணை தயாரிப்பு – அருள் கோவன்.

பிரபல முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு ‘மிஸ்டர் டபிள்யூ’ என்கிற கதையை எழுதி, அதற்குத் திரைக்கதை அமைத்து, வசனம் தீட்டி, தானே இசையமைத்து…. தனது முதல் படமாக இயக்கம் செய்கிறார் இயக்குநர் நிரோஜன் பிரபாகரன்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் நிரோஜன் பிரபாகரன் பேசும்போது, “ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.

உடலுக்கு உடை அழகு.

முகத்திற்கு மீசை அழகு.

பாடலுக்கு நடனம் அழகு

என்று கூறி வரும் சமுதாயத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடலில் வரும் ‘வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி’ என்று எழுதிய கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதையில் கதாநாயகனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லியிருக்கிறோம்..” என்றார்.

சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

“மிஸ்டர் டபிள்யூ’  திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும்…” என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.

 




error: Content is protected !!