ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்

ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்

சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசோடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயம் மிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், தனது தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தின் பெயர் ‘மிருகா’. இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – ஜாக்குவார் ஸ்டுடியோஸ்,  தயாரிப்பாளர் – பி.வினோத் ஜெயின், இயக்கம் – ஜே.பார்த்திபன், கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம், கிரியேட்டிவ் புரொட்யூசர் – எம்.நரேஷ் ஜெயின், வசனம் – ஏ.ஆர்.பி.ஜெயராம், படத் தொகுப்பு – சுதர்சன், இசை – அருள் தேவ், கலை இயக்கம் – மிலன் & எஸ்.ராஜமோகன், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், ஸ்ரீதர், விஜய், VFX – Knack Studios, தயாரிப்பு நிர்வாகம் – பழனியப்பன், புகைப்படங்கள் – மோதிலால், விளம்பர வடிவமைப்பு மற்றும் மோஷன் டீஸர் – ஆர்-ஆர்ட் ஸ்டுடியோ, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

இந்தப் படத்தின் இயக்குநரான ஜே.பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டி.எஃப்.டி. பயின்றவர். பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘மிருகா’ திரைப்படம்.

ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான்.

அப்படி ஒரு முயற்சியின்போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்ற நினைக்கும்போது, விதி வேறுவிதமாக நினைக்கிறது.

இப்படி ஒரு பூனையும், எலியும் கதை போல வேகமாக நகர்கிறது திரைக்கதை. ஒரு கட்டத்தில் இவனது அட்டூழியம் எல்லை மீறுகிறது. அந்த நேரத்தில் அந்தப் பெண் என்ன முடிவெடுத்தாள்..? அவனை எப்படி சமாளித்தாள்..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் இந்த ‘மிருகா’ திரைப்படம், வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.




error: Content is protected !!