விஷ்ணு விஷால் – அமலா பால் நடிக்கும் ‘மின்மினி’

விஷ்ணு விஷால் – அமலா பால் நடிக்கும் ‘மின்மினி’

'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத் தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான  தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்கள்.  

'மின்மினி'  படத்தின் தயாரிப்பில் 'ஸ்கைலார்க்  மீடியா' ஸ்ரீதர்  இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. 

"மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு இது, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ - திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் 'மின்மினி'  படத்தின் டீசரை விரைவில் வெளியிடவுள்ளோம்"  என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.