full screen background image

கியூப்புக்கு மாற்று நிறுவனத்தை தேடிப் பிடித்தது தயாரிப்பாளர் சங்கம்..!

கியூப்புக்கு மாற்று நிறுவனத்தை தேடிப் பிடித்தது தயாரிப்பாளர் சங்கம்..!

தமிழகத்தில் 40-வது நாளாக நடைபெற்று வரும் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஒரு புதிய திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கியூப் நிறுவனம் திரைப்படங்களை தியேட்டரில் திரையிடுவதற்கான VPF கட்டணத்தை வசூலிப்பதை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.

இன்றுவரையிலும் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கியூபுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனிகளை கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் முனைப்பாக இருந்து வந்தது.

இதன் முதல் படியாக இரு தினங்களுக்கு முன்பு ‘AEROX’ என்னும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இந்த நிறுவனத்தின் சர்வீஸை திரைப்படங்களின் திரையிடலுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்றைக்கு இதேபோல் மற்றுமொரு டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடரான ‘மைக்ரோப்ளக்ஸ்’ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒரு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலமாக தயாரிப்பாளர் சங்கமே தாங்கள் வெளியிடும் அனைத்து படங்களுக்கும் சொந்தமாகவே மாஸ்டரிங் வசதி செய்து, அந்தப் பிரதியை இந்த நிறுவனத்தின் DCI 2k, 4k ப்ரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் மூலமாக தியேட்டர்களுக்கு நேரடியாக வழங்கும்.

இந்தத் திட்டம் க்யூபுக்கு மாற்று முயற்சியாக இருப்பதால், இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score