‘மெர்சல்’ படம் செய்திருக்கும் சாதனைகளின் பட்டியல்..!

‘மெர்சல்’ படம் செய்திருக்கும் சாதனைகளின் பட்டியல்..!

நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் மாபெரும்  வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்தது.

ஒரு சாதனை என்றில்லை.. திரைப்படம் தொடர்பான அனைத்து வகையான பிரிவுகளிலும் இத்திரைப்படம் ஒரு மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது.

‘மெர்சல்’ திரைப்படம் படைத்த சாதனைகளின் முழு விபரம் :

1. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் ‘மெர்சல்’ படத்தின் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டு சாதனை படைத்தது.

2. தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட வீடியோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோக்களில் ‘மெர்சல்’ படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

3. அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங்

4. அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங் 

5. அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர் 

6. அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங்

7. மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங் 

8. அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங் 

9. விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா BOX OFFICE வசூலில் மெர்சல் படமானது 21.9  கோடி வசூலை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

10. தமிழ் நடிகர்களில் U-Tubeல் 25 வீடியோஸ் 100K LIKES பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே. இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோக்கள் 100K LIKES பெற்றுள்ளன.

11. ‘மெர்சல்’ தமிழ் மொழி வீடியோ சாங்ஸ்  மற்றும்  தெலுங்கில் வெளிவந்த  ‘அதிரிந்தி’ வீடியோ சாங்ஸ் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

12. மிக விரைவில் U -TUBEல் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ சாங்ஸ் லிஸ்டில் ’ஆளப் போறன் தமிழன்’ பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

13. உலக அளவில் மிக விரைவில் 150K  லைக்ஸ்  பெற்ற டீசரில் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் முதல் இடத்தில உள்ளது. மற்றும் ‘ஆளப் போறன் தமிழன்’ ஆடியோ டீஸர் தென்னிந்திய அளவில் 150K லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது.

14. ‘ஆளப் போறன் தமிழன்’ லிரிக் வீடியோ சாங் மற்றும் வீடியோ சாங் மிக விரைவில் 150K லைக்ஸ் பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

15. தென்னிந்திய சினிமாவில் மிக விரைவில் 50K லைக்ஸ் பெற்ற பட டீசர்களில் ‘மெர்சல்’ டீஸர் 5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

16. ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K லைக்ஸ் பெற்றுள்ளது, மொத்தம் 2.34  மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

17. 2017-ம் ஆண்டு SAAVN-ல் அதிக பேர் விரும்பி கேட்ட தமிழ்  ஆல்பங்களில் தென்னினிய  அளவில் ‘மெர்சல்’ முதல் இடத்தில உள்ளது.

18. இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23-வது RANK-ஐ பெற்றுள்ளது. தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US) $7.2 மில்லியன் பெற்று 50-வது RANK ல் இருந்தது. இதனை மெர்சல் படம் முறியடித்து (US)$ 11.89 பெற்று 23-வது இடத்தில உள்ளது.

19. WTP-ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களைவிட ‘மெர்சல்’ மூன்று மடங்காக  6473000 BARC யை பெற்றுள்ளது.

20. ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் ‘மெர்சல்’ WTP -8.5 POINTS பெற்று முதல் இடத்தில் உள்ளது.

21. ‘மெர்சல்’ படத்திற்கு ‘NATIONAL FILM AWARDS UNITED KINGDOM’-ல்  இருந்து இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கும், சிறந்த படத்திற்கான விருது ‘மெர்சல்’ படத்திற்கும் வழங்கப்பட்டது.

22. 2017 ரேடியோ மிர்ச்சி 93.8-யின் FMல் டாப் 100 பாடல்களில் ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறன் தமிழன்’ பாடல் முதல் இடத்தில் உள்ளது.

23. 92.2 BIG FM-ல் 100 மில்லியன்  பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்தில் ‘மெர்சல்’ ஆல்பம் உள்ளது.

24. 2018 ஆனந்த விகடன் விருதுகளில் ‘மெர்சல்’ படத்திற்கான விருதுகள்:

25. சிறந்த நடிகருக்கான விருதினை தளபதி விஜய்க்கும்,  சிறந்த பின்னணி பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஆடை வடிவமைப்பு விருது கோமல் ஷாஹினிகும் வழங்கப்பட்டது.

26. இந்தியா  அளவில் TREND ஆகிய 2017  HASTAGS ல் மெர்சல் TAG  மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

27. பிரான்சில் ‘மெர்சல்’ திரைப்படம் 32471 ENTRIES  பெற்று மற்ற தமிழ் படங்களைவிட முதல் இடத்தில் உள்ளது.

28. சென்னை சிட்டியில் மெர்சல் திரைப்படத்தின் 9 நாள் வசூலாக 9.23 கோடியைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

29. தென்னிந்திய அளவில் BOOKMYSHOW-ல் அதிக பேரால் விரும்பப்பட்ட படங்களின் பட்டியலில் ‘மெர்சல்’ படம் இடம் பெற்றுள்ளது.

30. சமூக வலைத்தளமான ட்விட்டரில் 2017-ல் அதிகமாக பேசப்பட்ட படங்களுள் ‘மெர்சல்’ படம் முதல் இடத்தில் உள்ளது.

31. இந்திய படங்களில் IMDB USERS-ல் RATE செய்யப்பட்டு 9-வது இடத்தில் உள்ளது.

32. உலக அளவில் APPLE MUSIC வீடியோ சாங்க்ஸ்  லிஸ்டில் முதல் தமிழ் பாடலாக ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறன் தமிழன்’ பாடல் இடம் பெற்றுள்ளது.

33. இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன HASTAG-ல் #MERSL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

34. ட்விட்டரில் EMOJI-யை அறிமுகப்படுத்திய பெருமை மெர்சல் திரைப்படத்தினை சேரும்.

35. ANNA UNIVERSITY TECHOFES  விருதுகள் 2018  

சிறந்த பட விருது மெர்சல் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கும், சிறந்த நடன இயக்குனர் விருது ஷோபி  மாஸ்டருக்கும், ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலுக்காக சிறந்த பாடகி விருது பூஜா வைத்யநாதனுக்கும், ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலுக்காக சிறந்த பாடகர் விருது சத்யப்பிரகாஷுக்கும், சிறந்த வில்லன் விருது மெர்சல் படத்திற்காக S.J.சூர்யாவிற்க்கும், சிறந்த  கலை இயக்குநர் விருது T.முத்துராஜூக்கும், சிறந்த இயக்குநர் விருது அட்லி அவர்களுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது G.K.விஸ்ணு அவர்களுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது விவேக் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

 




error: Content is protected !!