‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை..!

‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும்விதத்தில் இயக்குநர் M.S.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மெரினா புரட்சி’.

இந்தப் படத்தை சென்னையில் உள்ள தென்மண்டல சென்சார் அலுவலகத்தினர் தணிக்கைக்காக பார்த்த பின்பு எந்தக் காரணமும் சொல்லாமல் படத்தை Revising Committee-க்கு அனுப்பினார்கள்.

ரீவைஸிங் கமிட்டியில் இந்த மெரினா புரட்சி படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்தக் காரணமும் சொல்லாமல் படத்துக்கு அனுமதி தர முடியாது என்று சொல்லி தடை விதித்துள்ளனர்.

Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை.

ஆனால், இந்த ‘மெரினா புரட்சி’ படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2-nd Revising Committee-க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம்தான் இந்தப் படத்தின் தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.

தமிழர்களின் பெருமைமிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் ‘மெரினா புரட்சி’ படத்தை  முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிப்போம் என்று படத்தைத் தயாரித்துள்ள நாச்சியாள் பிலிம்ஸ்  குழுவினர் தெரிவித்துள்ளனர்.