பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது ‘மேல் நாட்டு மருமகன்’

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது ‘மேல் நாட்டு மருமகன்’

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ‘மேல் நாட்டு மருமகன். ‘

இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஆண்ட்ரீயன் என்னும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த நடிகை நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். மற்றும் வி.எஸ்.ராகவன்,  அஞ்சலி தேவி,  அசோக்ராஜ்,  சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா, இசை – வே.கிஷோர் குமார், படத் தொகுப்பு – விஜய் கீர்த்தி,  கலை – ராம், நடனம் – சங்கர். பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்., தயாரிப்பு நிர்வாகம் –ஆனந்த், தயாரிப்பு   – மனோ உதயகுமார், கதை,  திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்.

படம் பற்றி இயக்குநர் எம்.எஸ்.எஸ் கூறும்போது, “இந்த ‘மேல் நாட்டு மருமகன்’ திரைப்படம் ஒரு கலாச்சாரப் பதிவு. நம் நாட்டு கலாச்சாரத்தின் மீது ஈர்க்கப்பட்ட ஒரு பிரெஞ்ச் நாட்டு பெண், நம் நாட்டு இளைஞனை காதலித்து கரம் பிடிப்பதே கதை.

படத்தை வெளியிடுவதற்கு பல முறை முயன்றோம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஏகப்பட்ட தடைகள்.. அந்த தடைகளைத் தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. டிசம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட உள்ளோம். இங்கு மட்டுமல்ல; பிரான்சிலும் 30 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம்…”  என்றார் இயக்குநர்.