‘பாலிவுட் கிங்’ சல்மான்கானின் ‘மெய்மறந்தேன் பாராயோ’ – நவம்பர் 12 வெளியாகிறது..!

‘பாலிவுட் கிங்’ சல்மான்கானின் ‘மெய்மறந்தேன் பாராயோ’ – நவம்பர் 12 வெளியாகிறது..!

இந்தியாவின் இப்போதைய ‘வசூல் சக்கரவர்த்தி’ என்றழைக்கப்படும் சல்மான்கானின் அடுத்த படம் தீபாவளி ஸ்பெஷலாக அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

படத்தின் பெயர் ‘Prem Ratan Dhan Payo’. பொதுவாக ஆங்கிலம் மற்றும் தெலுங்கு, மலையாளப் படங்கள் மட்டுமே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும். ஆனால் இந்தச் சூழலில் சல்மான்கானின் இந்தப் படம் தமிழில் ‘மெய்மறந்தேன் பாராயோ’ என்கிற தூய தமிழ்ப் பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

சூப்பர் ஹிட் படங்களான ‘Maine Pyar Kiya’, ‘HAHK’ மற்றும் ‘Hum Saath Saath Hain’ ஆகிய படங்களைத் தயாரித்த ‘Rajshri Productions’ நிறுவனத்தின் சார்பில் Ajit Kumar Barjatya, Kamal Kumar Barjatya, Rajkumar Barjatya ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக அனில் கபூரின் மகளான சோனம் கபூர் நடித்துள்ளார். மேலும் நீல் நிதின் முகேஷ் மற்றும் அனுபம் கெர், Swara Bhaskar, Sanjai Mishra, Deepak Dobriyal, Armaan Kohli  ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வி.மணிகண்டன், எடிட்டிங் - Sanjay Sankla, இசையமைப்பு - Himesh Reshammiya (பாடல்கள்), Sanjoy Chowdhury, Himesh Reshammiya (பின்னணி இசை), பாடல்கள் - Irshad Kamil, பாடியவர்கள் -  Palak MuchhalShaanAman TrikhaVineet Singh, எழுத்து, இயக்கம் - Sooraj Barjatya.

இந்தப் படத்தின் ஆடியோ உரிமை டி-சீரியஸ் நிறுவனத்திற்கு 17 கோடி ரூபாய்க்கு விலை போனது பாலிவுட் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. இது மட்டுமின்றி படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் நெட்வொர்க் 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் பாலிவுட்டில் மிக அதிக தொலைக்காட்சி உரிமம் என்பது சல்மான்கானுக்கு பெருமைக்குரிய விஷயம். அக்டோபர் 1-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் டிரெயிலரை முதல் 3 நாட்களிலேயே 6 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்தது என்பது சாதனையானது.

படத்தின் இயக்குநரான Sooraj Barjatya, ஏற்கெனவே சல்மான்கானை வைத்தே பல வெற்றிப் படங்களை இயக்கியவர். Maine Pyar Kiya, Hum Aapke Hain Koun..!, Hum Saath-Saath Hain, Main Prem Ki Diwani Hoon, Vivah, Ek Vivah Aisa Bhi ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதால் இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதிலும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. தமிழில் ‘மெய்மறந்தேன் பாராயோ’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘பிரேம லீலா’ என்கிற பெயரிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் சல்மான்கானுக்கு ராம் சரண் தேஜா குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதிலும் இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அடுத்த மாதம் 12-ம் தேதி படம் வெளியாகிறது.

எப்போதும் பாலிவுட் கிங் சல்மான்கானின் புதிய படங்கள், அதற்கு முந்தைய சல்மான்கானின் படங்களின் வசூலையே முறியடித்து புதிய சாதனையைப் படைத்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் வசூலை அள்ளத்தான் போகிறது என்பதில் சந்தேகமேயில்லை.