பாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்

பாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்

மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’

படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி இருவரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - சாலை சகாதேவன், படத் தொகுப்பு – கே.எம்.கே.பழனிவேல், வசனம் – மதன் கார்க்கி, கலை இயக்கம் – மோகன மகேந்திரன், நடன இயக்கம் – கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர், தயாரிப்பு வடிவமைப்பு – கம்பம் சங்கர், பின்னணி இசை – சபேஷ்-முரளி, பாடல்கள் – வைரமுத்து, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன், இசை – என்.ஆர்.ரகுநந்தன், தயாரிப்பு நிறுவனம் – மனோஜ் கிரியேஷன்ஸ், தயாரிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம் – இயக்குநர் இமயம் பாரதிராஜா.

ஒரு உணர்வுப்பூர்வமான கதையைக் களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம். இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், தனி மனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைக் களத்தைக் கருவாகக் கொண்டதாகவும் அமைகிறது. 

அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும்போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமானவிதத்தில் படைத்திருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

இந்த ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.