ஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..!

ஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..!

‘சின்ன குஷ்பு’ என்று அறிவிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ்த் திரையுலகத்திற்குள் வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு சமீபகாலமாக படமே இல்லாமல் மும்பைக்கே திரும்பி பறந்து போனது சென்ற மாதக் கதை. இப்போது மீண்டும் ஒரு தமிழ்ச் சினிமாவில் நடிக்க தமிழகம் வருகிறாராம் ஹன்சிகா.

ETCETRA ENTERTAINMENT என்கிற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்கும் ‘மஹா’ என்னும் புதிய படத்தில்தான் ஹன்சிகா நாயகியாக நடிக்கவிருக்கிறாராம். 

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான U.R.ஜமீல் இயக்கவிருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படம் பற்றியும், இதில் ஹன்சிகா நுழைந்தது பற்றியும் பேசிய தயாரிப்பாளர் மதியகழன், “இதுவொரு கிரைம் திரில்லர் படமாகும். ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது. ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேயே நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது.

அவருடைய இமேஜை  மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றி உள்ள இயக்குநர் U.R.ஜமீல் கதையை அவரை வைத்து அவருக்காகவே எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு  பொருத்தமானவர் ஹன்சிகாதான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார் இயக்குநர் ஜமீல்.

ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உதாரணமாக இந்த ‘மஹா’ திரைப்படம் இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தமிழ்த் திரை ரசுகர்களுக்கு இந்த திரைப்படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன். இந்த ‘மஹா’ திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு ‘இளவரசி’ என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெரிய பெருமை” என்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.