விஷாலின் ‘மருது’ படம் ராஜபாளையத்தில் துவங்கியது..!

விஷாலின் ‘மருது’ படம் ராஜபாளையத்தில் துவங்கியது..!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘மருது’ திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று காலை ராஜபாளையத்தில் பூஜையுடன் துவங்கியது.

நடிகர் விஷால் ‘கதகளி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். உடனேயே அடுத்தப் படமான இந்த ‘மருது’வில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

IMG_2750 (1)

இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தரான அன்புச்செழியன் தயாரிக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இசை – டி.இமான், ஒளிப்பதிவு – வேல்ராஜ். எழுத்து, இயக்கம் – முத்தையா.

இந்தப் படத்தில் ராதாரவியும் நடிக்கவிருப்பதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போதுவரையிலும் ராதாரவி இதில் நடிக்கிறாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
error: Content is protected !!