மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்

மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்

நடிகர் சாருஹாசன், அவரது மனைவியான கோமளம், இவர்களது மகள் நடிகை சுஹாசினி மணிரத்னம், இவரது கணவர் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் தங்களது உடலை தானம் செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

சாகா அறக்கட்டளை என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி சாகாவரம் இசை நிகழ்ச்சியின்போது இதனை அவர்கள் தெரிவித்தனர்.

சாகா அறக்கட்டளை நிறுவனம் ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய இசையமைப்பாளர் பரத்வாஜின் ‘சாகாவரம்’ இசை நிகழ்ச்சியை நேற்று நடைபெற்றது.

saaga trust function

இந்த விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “எந்த நேரத்திலும் எந்தவித விபத்தும் நிகழலாம்.. அந்நேரத்தில் நாம் பதட்டம் அடையாமல் விபத்து நேர்ந்தவருக்கு முதலுதவி எவ்வாறு செய்வது என்பதை எங்கள் சாகா அறக்கட்டளை மூலமாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம்.

மேலும் ஒருவர் இறந்த பின்பும் அவர் உடலில் உள்ள பாகங்கள் மற்றவர்களுக்கு எந்தவகையில் உதவிகரமாக இருக்கும் என்பதையும், இறப்பின் பின்பும் உடல் தானத்தால் நாம் வாழலாம் என்ற உன்னத கருத்தையும் அனைவரின் மனிதிலும் விதைக்கின்றோம்.

எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மருத்துவர்கள், அதனால் இங்கு பயிற்சிக்கு வரும் யாவரையும் ஒரு சமுக மருத்துவராக மாற்றி மற்றவர்களுக்கு உதவி செய்யும்படி உரிய பயிற்சிகள் அளிக்கின்றோம்” என்றார்.

விழாவில் பேசிய நடிகை சுஹாசினி தானும், தனது தாய், தந்தை, கணவர் என்று நால்வருமே உடல் தானம் செய்வதாக அறவித்தார். இவர்களுடன் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவரது மனைவி பிரபா நிகில் முருகனும் உடல் தானம் செய்வதாக அறிவித்தனர்.

இந்த விழாவில் நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு பாக்யராஜ், சினேகா, சுஹாசினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குநர்கள் பார்த்திபன், வசந்த் சாய், சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனும், அவரது மகள் ஸ்ருதிஹாசனும் உடல் தானம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




error: Content is protected !!