மனம் மயங்குதே திரை முன்னோட்டம்

மனம் மயங்குதே திரை முன்னோட்டம்

கருமாரி கிரியேஷன்ஸ் வழங்கும் P.K.முத்துகுமார், V.செந்தில்குமார் தயாரிப்பில் “மனம் மயங்குதே” திரைப்படம் உருவாகி வருகிறது.

இதில் ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் ஹீரோவாகவும், புதுமுகம் ரியா ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். மற்றும், ரோபோசங்கர், இயக்குநர் மனோஜ்குமார், வினோத், முத்துகாளை, நெல்லை சிவா, எலிஸபெத், ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

N.S.ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஷியாம் மோகன், பவன் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர், P.சாய்சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில் R.G.ஆனந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் K.V.ராஜீவ்.

படத்தின் கதை பற்றி இயக்குநரிடம் கேட்டோம். “தாயே உலகம் என வாழும் ஒரு ஏழை இளைஞன் தன் தாய்க்கு மருத்துவம் செய்ய பணம் இல்லாததால் தாயை இழக்கிறான். உயிருக்கு உயிராய் காதலித்த காதலியையும் பணத்தை காரணம் காட்டி பிரிக்கிறார்கள். வாழ்க்கையில் எல்லாமே பணம்தானே.. அந்த பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்யும் நாயகன் தவறான வழிகளில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்கிறான். அப்படி நாயகன் சம்பாதிக்க நினைத்த பணத்தை அவனால் சம்பாதிக்க முடிந்ததா? அவன் காதலியுடன் சேர்ந்தானா? என்பதுதான் கதை..” என்றார்.
error: Content is protected !!