ரத்தன் மெளலி  – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’ திரைப்படம்

ரத்தன் மெளலி  – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’ திரைப்படம்

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மல்லி.’ 

இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடித்திருக்கிறரர். இவர் ‘13-ம் பக்கம் பார்க்க’, ‘வெள்ளிக்கிழமை 13-ம் தேதி’, ‘அரசகுலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.

நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ  நடித்திருக்கிறார்.  மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன் ராஜ்,  அம்சவேலு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – P.K.H. தாஸ், இசை – தினேஷ் – பஷீர், பாடல்கள் – புலவர் சிதம்பரனாதன், பாண்டிதுரை, படத் தொகுப்பு – B.S.வாசு, கலை – வினோத், நடனம் – சுரேஷ், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் ஷிவு, தயாரிப்பு நிர்வாகம் – நடராஜன், கதை, திரைக்கதை, தயாரிப்பு – ரேணுகா ஜெகதீஷ், வசனம், இயக்கம் – வெங்கி நிலா.

படம் பற்றி இயக்குநர் வெங்கி நிலா பேசும்போது, “தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான். அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை. படப்பிடிப்பு முழுவதும் வேலூர், ஏலகிரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில்  நடைபெற்றிருக்கிறது…” என்றார்.




error: Content is protected !!