full screen background image

மலையாள ‘மெமோரிஸ்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது..!

மலையாள ‘மெமோரிஸ்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது..!

‘டிமான்ட்டி காலனி’ வெற்றியைத் தொட்டிருந்தாலும் அதற்கடுத்து வந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் சுமாராக ஓடியதில் அருள்நிதி கொஞ்சம் அப்செட். 

Arulnidhi1

இருந்தாலும் அடுத்தப் படத்திற்குத் தயாராகிவிட்டார். ‘வல்லினம்’, ‘ஈரம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன்தான் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்படுகிறது என்பது சுவாரஸ்யம்.

‘பாபநாசம்’ படத்தின் கதாசிரியர், இயக்குநரான ஜீத்து ஜோஸப் இயக்கி 2013-ம் ஆண்டு வெளியான ‘மெமோரிஸ்’ என்கிற மலையாளப் படத்தைத்தான் இப்போது அருள்நிதிக்காக ரீமேக் செய்கிறார் அறிவழகன்.

இந்த ‘மெமோரிஸ்’ படத்தில் பிருத்விராஜ், மியா ஜார்ஜ், மேக்னா ராஜ், விஜயராகவன் ஆகியோர் நடித்திருந்தனர். இதுவொரு கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் டைப் கதை. தொடர்ச்சியாக திருமணமான ஆண்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார் என்பது புலனாய்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறார் போலீஸ் ஆபீஸர் பிருத்விராஜ். அவருடைய தேடுதல் வேட்டைதான் படத்தின் கதை..! இந்தப் படம் கேரளாவில் பெரும் வெற்றி பெற்றது.

இந்த தமிழ் ரீமேக்கை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது இன்னுமொரு சுவாரஸ்யம். 

Our Score