நடிகர் திலீப்-காவ்யா மாதவன் திடீர் திருமணம்..!

நடிகர் திலீப்-காவ்யா மாதவன் திடீர் திருமணம்..!

மலையாள நடிகர் திலீப், சக நடிகையான காவ்யா மாதவனை இன்று காலை கொச்சியில் திருமணம் செய்து கொண்டார். இந்த விழா கொச்சியில் உள்ள வேதாந்தா ஹோட்டலில் நடைபெற்றது.

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் திருமண நிகழ்ச்சி, இன்று காலை 8 மணியளவில் மீடியாக்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைத்து மலையாள சேனல்களும் இதனை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.

இந்த திருமண விழாவில் திலீப்-மஞ்சுவாரியரின் மகளான மீனாட்சியும் கலந்து கொண்டார். மேலும் நடிகர் மம்மூட்டி, சலீம், ஜனார்த்தனன், நரேன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், ஜோமோள், சிப்பி, எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!