தெலுங்கு ‘ரா ரா கிருஷ்ணய்யா’ தமிழில் ‘மகேந்திரா’வாக வருகிறான்..!

தெலுங்கு ‘ரா ரா கிருஷ்ணய்யா’ தமிழில் ‘மகேந்திரா’வாக வருகிறான்..!

ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ்.கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரித்துள்ள திரைப்படம் ‘மகேந்திரா’.

இந்தப் படத்தில் ‘மாநகரம்’ வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் – ரெஜினா கேஸண்ட்ரா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சாய் ஸ்ரீராம். இசை – அச்சு ராஜாமணி, பாடல்கள் – ஏக்நாத், தாணு கார்த்திக், கலை – ராமாஞ்சனேயலு, நடனம் – பிரதீப் அந்தோணி சேகர், சுசித்ரா சந்திரபோஸ், சண்டை பயிற்சி – வெங்கட், படத் தொகுப்பு – கே. வெங்கடேஷ், இணை தயாரிப்பு – எஸ் ராஜேஷ் , ராஜஸ்ரீ, மணிகண்டன், தயாரிப்பு – என்.சாய்ராம், இயக்கம்  – மகேஷ்பாபு.

இந்தப் படம் தெலுங்கில் ‘ரா ரா கிருஷ்ணய்யா’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதையே ‘மகேந்திரா’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள்.

தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவனாக இருந்தபோதே நல்லவனாக வாழ்கிறான். தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க , அவர்களை தன் வழிக்கு கொண்டு வர அவன் முயற்சிக்கிறான். இதில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் கதை. இதை கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குநர். காதல் காமெடி என பக்கா கமர்ஷியலாக ‘மகேந்திரா’ உருவாகி உள்ளது.  

‘பாகுபலி’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திரப் பெயரான ‘மகேந்திர பூபதி’யைத்தான் இங்கே ‘மகேந்திரா’வாக்கி இருக்கிறார்கள்.

‘பாகுபலி’யில் எப்படி தீய சக்திகள் அழிய வேண்டும் என்று பிரபாஸின் கதாபாத்திரம் போராடியதோ அது மாதிரி சந்தீப் கிஷன் இதில் போராடுகிறாராம். படம் விரைவில் வெளியாக உள்ளது.




error: Content is protected !!