‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்

‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்

பெண் கதாப்பாத்திரத்தை முன்னணி பாத்திரமாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகும் திரைப்படம் ‘மகா.’

Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஹன்ஷிகா மோத்வானி இந்தப் படத்தில் நாயகியாக  நடிக்கிறார். இப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இப்படத்தில் நடிகர்  கருணாகாரன், தம்பி ராமையா ஆகியோரும்  முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் U.R.ஜமீல் இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார். வித்தியாசமான வேடங்களை தேடிப் பிடித்து நடிக்கும் ஶ்ரீகாந்த் ‘மகா’ படத்தில் ‘விக்ரம்’ எனும் பாத்திரத்தில்  போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார்.

மிக ஆச்சர்யம் என்னவெனில் இவரது கதாப்பாத்திரம் படம் முழுதும் பயணிக்கும்படியானது. இவர் பங்கு பெறும் பகுதிகள் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார்த்தி வைக்கும் திரில் தருணங்களை கொண்டிருக்கும். ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீகாந்த் இக்கதாப்பாத்திரத்திற்காக தந்திருக்கும் உழைப்பு இப்படத்தை அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான  மைல் கல்லாக மாற்றியுள்ளது.

ஹன்ஷிகா மோத்வானி மற்றும் சிம்பு ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடியுள்ளது. படத்தின் புகைப்படங்கள் வைரலாக பரவி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் வரும் 2020 மே மாதம் படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
error: Content is protected !!