அசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது

அசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது

ஸ்ரீசங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.சாய்பாபு தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மாயத்திரை’.

தயாரிப்பாளர் வி.சாய்பாபு 15 வருடங்களுக்கு முன்பு குஷ்பு நாயகியாய் நடித்த ‘தாலி புதுசு’ படத்தைத் தயாரித்தவர்.

‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் இந்த ‘மாயத்திரை’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘டூ லெட்’, ‘திரௌபதி’  படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் ‘பாண்டி முனி’ படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்கம் – தி.சம்பத் குமார், தயாரிப்பு – V.சாய் பாபு, இசை – S.N.அருணகிரி, ஒளிப்பதிவு –இளையராஜா, கலை இயக்கம்  – பத்மஸ்ரீ தோட்டா தரணி, நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – பிரதீப் தினேஷ், ஒலியமைப்பு – அசோக், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

இயக்குநர்கள் பாலா, எழில், அகத்தியன் ஆகியோரிடம்  உதவி இயக்குநராய் பணிபுரிந்த சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

சிறு தெய்வ வழிபாடு, குலதெய்வம் பற்றிய முக்கியமான அம்சங்களை கதைக் கருவாகக் கொண்ட ‘மாயத்திரை’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.
error: Content is protected !!