‘காதல்’, ‘மைனா’ வரிசையில் அடுத்து வரும் ‘மாய பிம்பம்’ திரைப்படம்..!

‘காதல்’, ‘மைனா’ வரிசையில் அடுத்து வரும் ‘மாய பிம்பம்’ திரைப்படம்..!

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம். அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம்தான் ‘மாய பிம்பம்’.

இந்தப் படத்தில் ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ் பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

புகைப்படங்கள் – எட்வின் சகாய், இசை – நந்தா, படத் தொகுப்பு – வினோத் சிவகுமார், கலை இயக்கம் – மார்ட்டின் தீட்ஸ், நடனம் – ஸ்ரீக்ரிஷ், ஒலி – ஷான்சவன், வடிவமைப்பு – சந்துரு.

அறிமுக இயக்குநரான கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு ‘செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்துமிருக்கிறார்.

இத்திரைப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறது. உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும்.

இயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் முதல் படம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தரமான யதார்த்த காதல் சினிமாவை படைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பை கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடத்தியிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை உலகமெங்கும் V.T சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 




error: Content is protected !!