திரைக்கு வரவிருக்கும் ‘மாய பிம்பம்’ திரைப்படம்…! 

திரைக்கு வரவிருக்கும் ‘மாய பிம்பம்’ திரைப்படம்…! 

Self Start Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான K.J.சுரேந்தர் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாய பிம்பம்’.

இந்த ‘மாய பிம்பம்’ படத்தில் ஆகாஷ், ஹரி ருத்ரன், ஜானகி, ராஜேஷ் பாலா, அருண் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். வினோத் சிவக்குமார் படத் தொகுப்பு செய்ய, மார்ட்டின் டைடஸ் கலை இயக்கம் செய்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான K.J.சுரேந்தர் தற்போது தனது முதல் கனவு படைப்பான ‘மாய பிம்பம்’ படத்தை வெளியீட்டிற்கு கொண்டுவரும் நிலையை அடைந்திருக்கிறார்.

தமிழ் சினிமா ஆளுமைகளின் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும் அவரது ‘மாய பிம்பம்’ படைப்பை ‘மாஸ்டர் ஃபீஸ்’(Masterpiece)  நிறுவனம் வெளியிட முன் வந்திருக்கிறது.

தயாரிப்பாளர் K.J.சுரேந்தர் ‘மாய பிம்பம்’ படம் குறித்து பேசும்போது, "இந்த ‘மாய பிம்பம்’ படத்தை எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியால்தான் முடித்தேன். படம் முழுமை அடைந்த பிறகு தமிழ் சினிமாவின் ஆளுமைகள் சிலருக்கு படத்தை திரையிட்டு காட்டினேன். அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.

அதில் இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் போஸ் அவர்கள் பாராட்டியதோடு நில்லாமல் படத்தை வெளியிட ‘மாஸ்டர் ஃபீஸ்’ (Masterpiece) நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்போது அவர்கள்தான் இப்படத்தை விநியோகம் செய்கிறார்கள்.

இப்படம் கூடலூர், சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இயல்பான மொழியில் கமர்ஷியல் தன்மை நிறைந்த சினிமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

உணர்ச்சிபூர்வமான காதல் கதையில் ஒரு நல்ல நட்பும், குடும்ப மதிப்புகளும் நிறைந்திருக்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தின் மிக முக்கிய அம்சமாக வலு மிகுந்த பெண் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் என்று நம்புகிறேன்.." என்றார்.