சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன் கிட்டு’..!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன் கிட்டு’..!

நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாவீரன் கிட்டு.’

‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டியநாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தையும் இயக்கம் செய்கிறார். 

‘வெண்ணிலா கபடி குழு’வில் அறிமுகமான விஷ்ணு விஷால் மீண்டும் இப்படம் மூலம் சுசீந்திரனுடன் இணைகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இசை : D. இமான், ஒளிப்பதிவு : சூரியா, வசனம், பாடல்கள் : யுகபாரதி, எடிட்டிங் : காசி விஸ்வநாதன், கலை இயக்கம் : சேகர், நடனம்: ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை : கருணாகரன், தயாரிப்பு : ஐஸ்வேர் கந்தசாமி, D.N. தாய் சரவணன், ராஜீவன்.

இந்த ​’மாவீரன் கிட்டு’ திரைப்படம் ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985-ம் ஆண்டு காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம்..” என்று இயங்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். 

இதன் படப்பிடிப்பு நாளை பழனியில் ஆரம்பமாகிறது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
error: Content is protected !!