இயக்குநர் சுசீந்திரனின் அசராத உழைப்பும்; உன்னத சாதனையும்..!

இயக்குநர் சுசீந்திரனின் அசராத உழைப்பும்; உன்னத சாதனையும்..!

ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுச்சாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து உருவாக்கும் திரைப்படம் 'மாவீரன் கிட்டு.'

இந்தப் படத்தில் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், விஷ்ணு விஷால், சூரி மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். யுகபாரதியும், இமானும் இனிமையான பாடல்களை தந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சென்ற ஜுலை 15-ம் தேதி முதல் தொடங்கி அடுத்த 37 நாட்களில் 95 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.  பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் என வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து 37 நாட்கள் இந்தப் படமாக்கப்பட்டது தமிழ்த் திரையுலகில் சமீப காலத்து சாதனை என்றே சொல்லலாம்.

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகர்சாமி குதிரை’ படத்திற்குப் பிறகு, இரவு பகல் பாராமல் ஞாயிற்றுக்கிழமைகூட மொத்த படக் குழுவினரும் பணியாற்றி படத்தை குறுகிய காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

இதனையெல்லாம் கண்ட தயாரிப்பாளர் ஐஸ்வேர் சந்திரசாமி நெஞ்சம் நெகிழ்ந்து அயராது உழைத்த படக் குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.