full screen background image

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்

விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த நூறு படங்களுக்கும் மேல் கேரளாவில் ரிலீஸ் செய்த பிரபல வினியோகஸ்தரான எஸ்.ஜெயபால், தமது ஜெ.பி.எஸ். சினிமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லோகா.’

இந்தப் படத்தில் யோகேந்திரா, அக்ஷதா இவர்கள் இருவருடன் கேரளத்தை சேர்ந்த விஷ்மயா விஸ்வநாதன், கிரேன் மனோகர், விஷ்ணு, நந்தினி மற்றும் பலர் நடித்தள்ளனர்.

டிசைனர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீஆகாஷ் ஸ்ரீதர் இப்படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். திருச்செல்வம் படத் தொகுப்பையும், உதயசங்கர் ஒளிப்பதிவையும், டைகர் குரு சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும், டாக்டர் ராஜேந்திரன் – மோகன் ஜி நாயர் இருவரும் இணைத் தயாரிப்பையும் கவனிக்கின்றனர். கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் டி.எஸ்.திவாகர்.

இயக்குநர் டி.எஸ்.திவாகர் இதற்கு முன் ஐந்து படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘லோகா’ படம் பற்றி இயக்குநர் டி.எஸ்.திவாகர் பேசும்போது, “35 வயதுவரை திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.

புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறான் அவன். தேன் நிலவை கொண்டாட வந்தவனின் ஊரில் அடுத்தடுத்து பிரபல தொழில் அதிபர்கள் மர்மமான கொலை செய்யபடுகின்றனர்.

கொலை செய்தவனைக் கண்டு பிடிக்க வந்த துப்பறியும் போலீஸ்காரனுக்கு இந்தக் கொலைகளில் புது மண ஜோடி ஈடுபட்டிருக்கலாம் என்ற துப்பு கிடைக்கிறது. ஏன்..? எதற்கு..? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட காவல் துறையினர் பல அமானுஷ்யமான திகிலான நிகழ்வுகளை பார்க்கின்றனர். அதன் பரபரப்பான பல சம்பவங்கள் திரில்லாக இருக்கிறது.

அதன் பின்னர் நடந்தது என்ன? கொலைகளை செய்தது யார்…? என்ற அதிர்ச்சியான, அடுக்கடுக்கான கேள்விகள்தான் இத்திரைப்படம்..” என்றார்.

கேரளா, கோவை, சென்னை உட்பட பல இடங்களில் இந்த ‘லோகா’ படம் உருவாகி வருகிறது.

Our Score