வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் ‘லாக்கப்’

வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் ‘லாக்கப்’

சினிமா கலையை கற்றதோடு நில்லாமல்… அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் தயாரிப்பாளரும், நடிகருமான நித்தின் சத்யா.

தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத் -எ  நித்தின்  சத்யா  புரொட்கஷன்  ஹவுஸ்’  சார்பாக தயாரிப்பாளர் நித்தின்  சத்யா  சென்ற  வருடம்  ஜெய்  நடிப்பில்  உருவான  ‘ஜருகண்டி’ படத்தை  தயாரித்து வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து  தற்போது  அவர்  பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம்  ‘லாக்கப்.’

????????????????????????????????????

 

முழுக்க  முழுக்க  இன்வெஸ்டிகேடிவ்  திரில்லராக  உருவாகும்  இப்படத்தில்  வைபவ் கதாநாயகனாகவும்  வாணி  போஜன்  கதாநாயகியாகவும்  நடிக்க,  பிரபல  இயக்குநரும், நடிகருமான  வெங்கட் பிரபு  முற்றிலும்  மாறுபட்ட  முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  ஈஸ்வரி  ராவ்,   பூர்ணா  ஆகியோர்  முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்க  உடன்  பல நடிகர், நடிகையர்கள்  நடித்துள்ளனர்.

vaani bojan

இசை – ஆரோல் கரோலி, ஒளிப்பதிவு – சாண்டி, படத் தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த், கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

இந்தப் படத்தை  புதுமுக  இயக்குநரான  S.G.சார்லஸ்  இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான  ‘லாக்கப்’  படத்தின்  முதல்  பார்வை  போஸ்டர்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் மும்முரமாக  ஈடுபட்டுள்ள  படக் குழுவினர் ‘லாக்கப்’  திரைப்படம் விரைவில்  வெளியாகி  ரசிகர்களுக்கு  திரை விருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.
error: Content is protected !!