full screen background image

ஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..!

ஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..!

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது ‘எல்.கே.ஜி.’ என்ற அரசியல் நையாண்டி படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.

மீம்ஸ் போட்டே கலக்கி வரும் இணையத்தள இளைஞர்கள் வட்டாரம், இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலைத் தளங்களில் சிறப்பாக வரவேற்றனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் புரொடெக்சன்ஸ் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில்  சம்பத், இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றிப் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, “இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றியமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம்தான் இந்த ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்.

ப்ரியா ஆனந்த் எனக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார். எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த  பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.

நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார்.  பல்வேறு காலக்கட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம். அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள்.

பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, ‘மேயாத மான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பு செய்கிறார்.

திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும்  ஈர்க்கும்…” என நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஆர்.ஜெ.பாலாஜி.

Our Score