மலையாள நடிகர் ஆதில்-அஞ்சு குரியன் நடிப்பில் லிப்ரா புரொடெக்சன்ஸ் தயாரிக்கும் 4-வது படம்..!

மலையாள நடிகர் ஆதில்-அஞ்சு குரியன் நடிப்பில் லிப்ரா புரொடெக்சன்ஸ் தயாரிக்கும் 4-வது படம்..!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய விஜயராஜ் இயக்கவுள்ளார்.

‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாண்டமான நகைச்சுவை திரைப்படம் ‘நட்புனா என்னன்னு தெரியுமா’.

இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த். 

‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தனது நான்காவது படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

PRODUCTION-NO4 

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய விஜயராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் ‘ஆதில்’ நடிக்கவுள்ளார். இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ் பெற்ற ‘Dance 4 Dance’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார். 

மேலும் இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். 

தயாரிப்பு – ரவீந்தர் சந்திரசேகரன் (லிப்ரா புரோடக்ஷன்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜயராஜ், ஒளிப்பதிவு – ஒம் நாராயன், இசை – கிரிநந்த், படத் தொகுப்பு – ஆலன்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.